விழுப்புரம். செப். 8- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 13ஆவது விழுப்புரம் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் கே.சரவணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஏ.ஜே.பார்த்திபன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் என்.ஜனார்த்தனன் சங்க கொடியை ஏற்றினார். மாநிலச் செயலாளர் எம்.சௌந்தரராஜன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் கே.மகாலிங்கம் வேலை அறிக்கையையும், பொருளாளர் பி.ரவி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஏ.பக்கிரிசாமி, வி.நாகரா ஜன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர் ஏ.ரஹீம், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகி கே.வேலாயுதம், முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.இளங்கோபிரபு ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாநில மகளிர் குழு உறுப்பினர் பி.சுந்தராம்பாள் தலைமையில் மகளிர் கருத்தரங்கம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் மு.அன்பரசு மாநாட்டை நிறைவு செய்து பேசினார். இணைச்செயலாளர் ஜி.ஏ.அசோகன் நன்றி கூறினார். மாவட்டத் தலைவராக கே.சரவணன், செயலாள ராக கே.மகாலிங்கம், பொருளாளராக பி.ரவி உள்ளிட்ட 11 பேர் நிர்வாகி களாக தேர்வு செய்யப்பட்ட னர். விழுப்புரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், புதிதாக உருவாக்கப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நகரங்களில் பொதுக்கழி ப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்ற ப்பட்டன.